திருமணத்தை மீறிய உறவில் மனைவி: இருவரையும் வெட்டிக் கொன்ற கணவர்..!

திருமணத்தை மீறிய உறவில் மனைவி: இருவரையும் வெட்டிக் கொன்ற கணவர்..!

திருமணத்தை மீறிய உறவில் மனைவி: இருவரையும் வெட்டிக் கொன்ற கணவர்..!
Published on

கோவில்பட்டி அருகே மனைவி வேறொருவருடன் ஒன்றாக இருந்ததை பார்த்த கணவன், இருவரையும் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள புங்கவர்நத்தம் காலனி, கீழத் தெருவை சேர்ந்தவர் சண்முகம். மேளம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மாரியம்மாள் என்ற மனைவியும், ஒரு மகள், மகன் உள்ளனர். இந்நிலையில் அதேபகுதியைச் சேர்ந்த ராமமூர்த்திக்கும், சண்முகத்தின் மனைவி மாரியம்மாளுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இது சண்முகத்திற்கு தெரிய வர இருவரையும் அழைத்து கண்டித்துள்ளார். அதற்கு இருவரும் சத்தியம் செய்து மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு பின்பும், இருவரும் வழக்கம்போல ஒன்றாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அந்த ஊரில் தண்ணீர் திறந்து விடுவது, மின்சார வேலைகள் செய்து தருவது என அனைவருக்கும் நல்ல பிள்ளையாக இருந்த காரணத்தால் ராமமூர்த்தி மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை.

இந்தநிலையில் நேற்றிரவு சண்முகம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதிகாலையில் வீட்டின் உள் அறையில் சத்தம் கேட்டு சண்முகம் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது மாரியம்மாளும் ராமமூர்த்தியும் ஒன்றாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம், ஆத்திரத்தில், ராமமூர்த்தியின் தலையை துண்டாக வெட்டிக்கொலை செய்தார். மேலும், அருகில் இருந்த தனது மனைவியையும் வெட்டிப் படுகொலை செய்தார்.

(கணவர் சண்முகம்)

பின்னர், பசுவந்தனை காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆஜராகி, தான் கொலை செய்த விபரங்களை சண்முகம் தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com