குற்றம்
நடத்தையில் சந்தேகப்பட்டு திட்டிய மனைவி - பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிர்விட்ட கணவன்
நடத்தையில் சந்தேகப்பட்டு திட்டிய மனைவி - பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிர்விட்ட கணவன்
புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைவி திட்டியதால் மனமுடைந்த கணவன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
குப்பகுடி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். நேற்று இவர் தனது வீட்டில் மயங்கிக் கிடந்துள்ளார். அதனைக் கண்ட உறவினர்கள் அவரை உடனடியாக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். சதீஷ்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவி ராதிகா திட்டியதால் சதீஷ்குமார் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.