\
வரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது

வரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது

வரதட்ணை கொடுமை: தற்கொலைக்கு முயன்று கால்கள் முறிந்த பெண்; கணவர் கைது
Published on: 

வரதட்சணை கொடுமையால் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற விவகாரத்தில் தலைமறைவாக இருந்த கணவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை மதுரவாயலை சேர்ந்த செந்தில்நாதன் என்பவர், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விக்னி நாகநந்தினியை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். செந்தில் நாதனும் அவரது தாய், தங்கையும் சேர்ந்து கொண்டு நாக நந்தினியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த 25-ஆம் தேதி நாக நந்தினியிடம் வேறு திருமணம் செய்து கொள்ளப்போவதாக செல்போனில் செந்தில் நாதன் கூறியதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நாகநந்தினி வீட்டின் 2-வது மாடிக்கு சென்று கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

2 கால்கள் முறிந்த நிலையில், நாக நந்தினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த செந்தில்நாதனை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com