மனைவி கொலை; கணவர் கைது
மனைவி கொலை; கணவர் கைதுpt desk

கர்நாடகா: ரீல்ஸ் மோகத்தால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு - இறுதியில் நேர்ந்த துயரம்

கர்நாடகாவில் ரீல்ஸ் மோகத்தில் இருந்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் உடுப்பி பிரம்மவர்சாலி கிராமத்தில் வசிப்பவர்கள் கிரண் உபாத்யா (30), ஜெயஸ்ரீ (28) தம்பதியர். இவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இதனிடையே ரீல்ஸ் மோகத்தில் இருந்த ஜெயஸ்ரீ, இன்ஸ்டாகிராமில் மூழ்கி எப்போதுமே ரீல்ஸ் பதிவு செய்து வந்துள்ளார்.

Ambulance
Ambulancept desk

இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்றும் கணவன் மனைவி இடையில் சண்டை ஏற்பட்டது. பின், இருவரும் தூங்கச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து அதிகாலையில் ஜெயஸ்ரீ மீண்டும் செல்போனில் முழ்கிய நிலையில், தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கிரண், அரிவாளால் ஜெயஸ்ரீயை வெட்டியுள்ளார். படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயரிழந்தார்.

மனைவி கொலை; கணவர் கைது
உயர் பொறுப்பில் இருக்கும் பெண்ணுக்கே தாக்குதல்... சாமானியரின் நிலை? - x தளத்திலிருந்து விலகிய எஸ்.பி

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டா போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கிரணை கைது செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com