யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் - கணவர் கைது

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் - கணவர் கைது

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் - கணவர் கைது
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பணப்பாக்கத்தில் யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவரை காவல்துறை கைது செய்தது.

கடந்த 18ஆம் தேதி நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் யூடியூப் பார்த்து தனது மனைவி கோமதிக்கு பிரசவம் பார்த்ததாக புகார் எழுந்தது. இதனால் பிரசவத்திலேயே ஆண் குழந்தை இறந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது. குற்றம் என தெரிந்தும் தவறு செய்ததாக லோகநாதன் மீது நெமிலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லோகநாதனின் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மாவட்ட சுகாதார துணை இயக்குநர் மணிமாறன் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், லோகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். லோகநாதனுடன் இணைந்து பிரசவம் பார்த்ததாக அவருடைய சகோதரி கீதா என்பவரையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com