வரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்!

வரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்!

வரதட்சணை கொடுமை; காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவர்!
Published on

வரதட்சணை தராததால் காதல் மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட கணவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். பின்னர் அந்த பெண் திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பருடன் காதல் வயப்பட்டுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இதையடுத்து விஜயபாரதி அடிக்கடி ரூ.10 லட்சம் வரதட்சணையாக கேட்டு அந்த பெண்ணை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பணம் தரவில்லை என்றால் உனது ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் எனவும் மிரட்டி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கடந்த ஜூலை மாதம் விஜயபாரதியுடன் சண்டை போட்டுக்கொண்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அப்போதும் விடாமல் தொலைபேசி மூலம் பணம் வேண்டும் என தொடர்ந்து விஜயபாரதி தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

ஆனால் பணம் தராததால் ஆத்திரமடைந்த கணவர் விஜயபாரதி மனைவியின் ஆபாச புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து உறவினர் கொடுத்த புகாரின் பேரில் அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாரதியை கைது செய்தனர். விசாரணையில் மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியது, ஃபேஸ்புக்கில் மனைவியின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டது உறுதிப்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com