\
தந்தூரியால் மாணவன் பலி? - உணவகத்திற்கு சீல்

தந்தூரியால் மாணவன் பலி? - உணவகத்திற்கு சீல்

தந்தூரியால் மாணவன் பலி? - உணவகத்திற்கு சீல்
Published on

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் மாணவன் இறந்ததாகக் கூறப்படும், 5 ஸ்டார் எலைட் என்ற ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

கடந்த மாதம் 24ஆம் தேதி நண்பர்களுடன் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவர் திருமுருகன், அன்றிரவே உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கடந்த 29ஆம் தேதி உயிரிழந்தார். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மாணவன் சாப்பிட்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். இதையடுத்து ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com