ஓசூர்: கஞ்சா விற்பனை செய்ததாக இரு வடமாநில இளைஞர்கள் கைது
ஒசூர் அருகே கஞ்சா கடத்தி வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்த போலீசார் 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆலூர் கிராமத்தின் அருகில் உள்ள பைப் தயாரிக்கும் நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர், இந்தநிலையில் அந்நிறுவனத்தில் பணிபுரியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தன் குமார், சாத்ருகன் குமார் ஆகிய இருவரும் விடுமுறைக்கு ஊருக்குச் சென்று விட்டு மீண்டும் ஆலூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.
இதையடுத்து அவர்கள் வரும்போது கஞ்சாவையும் எடுத்து வந்து அப்பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக அட்கோ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்த 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.