\
ஓசூர்: செல்போன் கடையின் சுவற்றில் துளையிட்டு திருடிய நபர் கைது - 15 போன்கள் பறிமுதல்

ஓசூர்: செல்போன் கடையின் சுவற்றில் துளையிட்டு திருடிய நபர் கைது - 15 போன்கள் பறிமுதல்

ஓசூர்: செல்போன் கடையின் சுவற்றில் துளையிட்டு திருடிய நபர் கைது - 15 போன்கள் பறிமுதல்
Published on: 

ஒசூர் அருகே செல்போன்கடையில் துளையிட்டு 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 15 செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பாகலூரில் தீபக் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையில் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி மர்ம நபர், கடையின் சுவற்றில் துளையிட்டு கடையினுள் இருந்த 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்கள் திருடு போயின. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாகலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், பாகலூர் அடுத்த கனிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 15 ஸ்மார்ட் போன்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதன் மதிப்பு சுமார் 1,42,800 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com