ஓசூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் போக்சோவில் கைது

ஓசூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் போக்சோவில் கைது

ஓசூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் போக்சோவில் கைது
Published on

ஓசூரில் 14 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக, இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூரை அடுத்துள்ள சூளகிரில் வெல்டிங் பட்டறையில் கூலி வேலை செய்துவருபவர் ரஷீத் பாஷா (23). இவர், தன் வீட்டின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் உறவினரின் பெண்ணான 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவரவே நடந்த சம்பம் குறித்து சூர் அனைத்து மகளியர் காவல் நிலையத்தில் ரஷீத் பாஷா மீது புகார் அளித்தனர். புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சாவித்திரி இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து ரஷீத் பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com