ஒசூர்: முத்தூட் பைனான்ஸ் நகை கொள்ளை... குற்றவாளிகள் சிக்கியது எப்படி? விரிவான தகவல்

ஒசூர்: முத்தூட் பைனான்ஸ் நகை கொள்ளை... குற்றவாளிகள் சிக்கியது எப்படி? விரிவான தகவல்

ஒசூர்: முத்தூட் பைனான்ஸ் நகை கொள்ளை... குற்றவாளிகள் சிக்கியது எப்படி? விரிவான தகவல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க ஆபரணங்களை கொள்ளை அடித்து தப்பி சென்ற கொள்ளையர்கள் 9 பேர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டனர்.

ஓசூர் பாகலூரில் உள்ள முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் புகுந்த வடநாட்டு கொள்ளையர்கள் 6 பேர் துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி கட்டிபோட்டு அங்குள்ள லாக்கர்களை திறந்து 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க ஆபரணங்களை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பைனான்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஓசூர் போலீசார், அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை கைபற்றி தீவிர விசாரணை நடத்தி 10 தனிப்பட்ட அமைத்ததோடு உடனடியாக அனைத்து மாநில போலீசாருக்கும் கொள்ளை சம்பவம் பற்றி தகவல் அளித்தனர்.

இதற்கிடையே வடநாட்டு கொள்ளையர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்ட போலீசார் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநில போலீசாருக்கும் தகவல்களை அனுப்பினார். அதன் பிறகு முத்தூட் நிதி நிறுவனத்தனர் கொடுத்த தகவலில் தங்க நகைகளை எடுத்து சென்ற பைகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக காவல் துறையினருக்கு தெரிவித்தனர்.

அதன் பிறகு ஜிபிஎஸ் கருவி சிக்னளை டிராகிங் செய்து இரண்டு தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் ஆனேகல் நெஞ்சாலையில் உள்ள கர்பூரா என்ற பகுதிக்குச் சென்ற தனிப்படை போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு கைப்பேசி கிடைத்தது. அந்த கைப்பேசி உதவியுடன் தனிப்படை போலீசார் விசாரணையை துரித படுத்தினார்கள், அந்த பகுதியில்கிடைத்த கைப்பேசி மூலம் குற்றவாளிகள் வேறு இரு நபர்களுக்கு தொடர்பு கொண்டு பேசியிருப்பதை அறிந்த போலீசார், குற்றவாளிகள் தொடர்பு கொண்ட கைப்பேசி எண்களுக்கு செல்போன் டவர் லொகேஷன் ராகிங் செய்த போது அந்த இரு எண்களும் கர்நாடக மாநிலத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்லும் வழியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல் தெரியவந்தது இதையடுத்து தனிப்படை போலீசார் ஹைதராபாத் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

உடனடியாக விரைந்து செயல்பட்ட போலீசார் ஐதராபாத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஜிபிஎஸ் உதவியுடன் கொள்ளையடித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் நடமாட்டத்தை கண்டு பிடித்த தமிழக போலீசார், அவர்கள் தேசிய நெடுஞ்சாலை எண் 44 வழியாக வடநாட்டை நோக்கி செல்வது பற்றி தெலங்கானா போலீசாருக்கு தகவல் அளித்தனர். தமிழக போலீசார் அளித்த துள்ளிய தகவலின் அடிப்படையில் சமசத்புர் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த கொள்ளையர்களின் ஐந்து பேர் மற்றும் கண்டெய்னர் லாரி ஒன்றில் சென்று கொண்டிருந்த 4 பேரையும் தெலங்கானா மாநில போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 12கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க ஆபரணங்கள், 93 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், கைதுப்பாக்கிகள் ஏழு, 96 துப்பாக்கி தோட்டாக்கள், பயணம் செய்வதற்காக அவர்கள் பயன்படுத்திய கார், கண்டெய்னர் லாரி ஆகியவற்றை தெலங்கானா போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் ரூப் சிங் பகால், அமீட், சங்கர் சிங் பாகல், பவன் குமார், புபேந்தர் மஞ்சி, விவேக் மண்டல், டீக் ராம், ராஜிவு குமார், லூயில் பாண்டே ஆகிய 9 பேர் என தெரியவந்தது.

இந்நிலையில் கொள்ளையர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட தங்க ஆபரணங்கள், துப்பாக்கிகள், செல்போன்கள் மற்றும் தோட்டாக்கள் ஆகிவற்றை காட்சிப்படுத்தி செய்தியாளரிடம் பேசிய ஹைதராபாத் காவல் ஆணையர் சஞ்சனார், இரு மாநில போலீசாரும் எடுத்துக்கொண்ட தீவிர முயற்சிகள், சரியான முறையில் நடைபெற்ற தகவல் பரிமாற்றம் ஆகியவற்றின் காரணமாகவே குறைந்த நேரத்தில் கொள்ளையர்களை பிடிக்க முடிந்தது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com