நிற்காமல் சென்ற பேருந்து மீது கல் வீசி தாக்கி கண்ணாடி உடைப்பு; பள்ளிமாணவர்கள் அவதி!

நத்தாமூர் கிராமத்தில் மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு உளுந்தூர்பேட்டைக்கு வந்து கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து ஆத்தூர் கிராமத்தில் நிற்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கினார்.
பஸ் உடைப்பு
பஸ் உடைப்புPT

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நத்தாமூர் கிராமத்திலிருந்து நகரப் பேருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து நேற்றுறு காலை சுமார் 8.30 மணி அளவில் ஆத்தூர் கிராமத்தில் நிற்காமல் கடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்பொழுது ஆத்தூர் பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல் வீசி தாக்கியுள்ளார்.

இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. மேலும், பேருந்தில் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்த மூன்று பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஓட்டுநர் துரைராஜ் பேருந்தை அதே பகுதியில் நிறுத்தினார். அப்போது பேருந்தில் இருந்த மாணவ மாணவிகள் கீழே இறங்கி மாற்று பேருந்து வந்தால் செல்வதற்காக காத்திருந்தனர்.

PT

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர் துரைராஜ் உளுந்தூர்பேட்டை போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் திருநாவலூர் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். பேருந்து நிறுத்தாமல் சென்றதால் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com