காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணன் கொலை: காதலனுடன் கைதான இந்தி நடிகை ஷான்யா
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அண்ணனை கூலிப்படையை ஏவி கொலைசெய்த இந்தி நடிகை ஷான்யா காடவே, தனது காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் தலை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை போலீஸார் கைப்பற்றினர். இது தொடர்பாக போலீஸ் தீவிரமாக விசாரணை செய்தபோது கொலைசெய்யப்பட்ட நபர், மிஸ் கர்நாடகா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், இந்தி நடிகையுமான ஷான்யாவின் அண்ணன் ராகேஷ் எனத் தெரியவந்தது. இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரித்தபோது, ராகேஷை கொலை செய்தது நடிகை ஷான்யாதான் என்ற அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.
மும்பையில் வசித்துவரும் ஷான்யா, தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை காதலித்து வந்துள்ளார். இது ராகேஷ்க்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அடிக்கடி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால் நடிகை ஷான்யா மற்றும் அவரது காதலன் இருவரும் இணைந்து கூலிப்படை மூலமாக ராகேஷை கொலை செய்துள்ளனர். தற்போது இந்த கொலை தொடர்பாக நடிகை ஷான்யா மற்றும் அவரது காதலன் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

