\
உடல்நலம் பாதிப்பு: மாணவியை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

உடல்நலம் பாதிப்பு: மாணவியை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

உடல்நலம் பாதிப்பு: மாணவியை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி
Published on

மேலூரில் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த நா. கோவில்பட்டியைச் சேர்ந்தவர் 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி. இவரது பெற்றோர் வீட்டில் இல்லாதபோது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (40) என்பவர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இதை யாரிடமாமும் சொல்லக் கூடாது என மிரட்டிள்ளார் இதனால் பாதிக்கப்பட்ட மாணவி தனக்கு நேர்ந்ததை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், சில மாதங்கள் கழித்து மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மாணவியின் குடும்பத்தினர் சிகிச்சைகாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் விசாரித்த போது நடந்தவற்றை மாணவி கூறியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாய், மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததால் மதுரை மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் நடத்திய விசாரணையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் ரமேஷைகைது செய்து; விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com