மது போதையில் திருடச்சென்ற நபர்: மயங்கி விழுந்ததால் போலீசில் சிக்கினார்

மது போதையில் திருடச்சென்ற நபர்: மயங்கி விழுந்ததால் போலீசில் சிக்கினார்

மது போதையில் திருடச்சென்ற நபர்: மயங்கி விழுந்ததால் போலீசில் சிக்கினார்
Published on

வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து திருட முயன்றபோது மது போதையில் மயங்கிய நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கோவையைச் சேர்ந்தவர் சேகர் (58). சமையல் கலைஞரான இவர் தனது மனைவி ஆனந்தியுடன் (55) சென்னை, நங்கநல்லூர், தில்லைகங்கா நகர், 23-வது தெருவில் தங்கி சமையல் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சமையல் வேலைக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பினார்.


அப்போது, வீட்டு கதவு பூட்டு உடைந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த ஆனந்தி, உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்ட நிலையில் ஒரு நபர் அதன் அருகே விழுந்து கிடந்தது தெரியவந்தது. அதைப்பார்த்த ஆனந்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அளவு கடந்த போதையில் அந்த நபர் மயங்கி கிடந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் அந்த நபரை தெளிய வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் ஆலந்தூர், வ.உ.சி., தெருவை சேர்ந்த நாகராஜ் (36) என்பது தெரியவந்தது. இது குறித்து புகாரின் அடிப்படையில் ஆதம்பாக்கம் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com