போரூர் சிறுமி கொலைவழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் முறையீடு

போரூர் சிறுமி கொலைவழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் முறையீடு
போரூர் சிறுமி கொலைவழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் முறையீடு

போரூரில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி தஷ்வந்த் தூக்குதண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

சென்னை குன்றத்தூர் பகுதியிலுள்ள போரூரை சேர்ந்த சிறுமி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். தனிப்படை அமைத்து தஷ்வந்த்தை தீவிரமாக தேடிவந்த தமிழக காவல்துறை, மும்பையில் அவரை கைது செய்தது. விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய அவரை மீண்டும் 24 மணி நேரத்திற்குள் மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை காவல்துறையினர் கைது செய்தனர். பின் தஷ்வந்த் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.போரூர் சிறுமி கொலை வழக்கு விசாரணை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்ற நிலையில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் ஆள்கடத்தல், பாலியல் கொடுமை, கொலை உள்ளிட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.இதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்பில், குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி குற்றவாளி தஷ்வந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.  சான்று பொருட்கள் பறிமுதல் செய்ததில் விதிமீறல், முன்னுக்கு பின் முரணாக சாட்சியம் அளித்தனர் என அதில் தெரிவித்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் 4வாரத்தில் மாங்காடு காவல்துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com