ஹரியானாவில் பள்ளி தலைமை ஆசிரியையை மாணவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் யமுனா நகரில் உள்ள விவேகானந்தா பள்ளியில் வணிகவியல் பிரிவில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன், பள்ளி தலைமை ஆசிரியையை தனது தந்தையின் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். மூன்று குண்டுகள் பாய்ந்த நிலையில் தலைமை ஆசிரியை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மாணவனின் வருகைப்பதிவேடு சரிவர இல்லாததால், சம்பந்தப்பட்ட மாணவன் மீது தலைமை ஆசிரியை நடவடிக்கை எடுத்திருந்தார். இதன் காரணமாகவே தலைமை ஆசிரியையை மாணவன் சுட்டுக் கொன்றது தெரியவந்துள்ளது. தப்பியோடிய மாணவனை பள்ளி ஆசிரியர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர். இதையடுத்து அந்த மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.