திருடச் சென்ற இடத்தில் கையும் களவுமாக கிராம மக்களிடம் சிக்கிய அரை டவுசர் திருடன்

திருடச் சென்ற இடத்தில் கையும் களவுமாக கிராம மக்களிடம் சிக்கிய அரை டவுசர் திருடன்

திருடச் சென்ற இடத்தில் கையும் களவுமாக கிராம மக்களிடம் சிக்கிய அரை டவுசர் திருடன்
Published on

நாகை அருகே வீட்டில் திருடச் சென்றபோது கையும் களவுமாக சிக்கிய அரை டவுசர் திருடனை கிராம மக்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் தெற்குதெரு பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவரது வீட்டிற்கு நேற்றிரவு அரை டவுசருடன் ஒருவர் சென்றுள்ளார். இதனைக் கண்டு சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை நோட்டமிட்டபடியே பின் தொடர்ந்துள்ளனர். இதனைக் கண்டு சுதாரித்துக்கொண்ட திருடன் அங்கிருந்து உடனடியாக ஓட்டம் பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

இதையடுத்து தட்டுத்தடுமாறி ஓடிய திருடனை மடக்கிப் பிடித்த கிராம மக்கள், அங்குள்ள மரத்தில் கட்டி வைத்துள்ளனர். அதனைத்தொடர்ந்து கிராம மக்கள் அவனிடம் மேற்கொண்ட விசாரணையில், அரை டவுசர் போட்ட திருடன் சென்னையை சேர்ந்த வினோத்ராஜ் என்பதும், ஏற்கெனவே அதே பகுதியில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான இருசக்கர வாகனத்தை திருடியதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வேளாங்கண்ணி போலீசாருக்கு கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். இருப்பினும் இரவு நேரங்களில் கைதிகளை காவல்நிலையத்தில் வைத்திருக்கக் கூடாது என்ற உத்தரவால் கிராம மக்களே திருடனை விடிய விடிய காவல்காத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

நாகை அருகே திருடச்சென்ற இடத்தில் கையும் களவுமாக அரை டவுசர் திருடன் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com