காஷ்மீர் வங்கியில் துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த மர்மநபர்கள்

காஷ்மீர் வங்கியில் துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த மர்மநபர்கள்

காஷ்மீர் வங்கியில் துப்பாக்கியை காட்டி கொள்ளையடித்த மர்மநபர்கள்
Published on

ஜம்மு-காஷ்மீர் வங்கிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த மர்ம நபர்கள் வங்கியில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டம், அர்வானி பகுதியில் உள்ள ஜம்மு-காஷ்மீர் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு துப்பாக்கிகளுடன் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை மிரட்டி வங்கியில் இருந்த பணத்தை அள்ளிக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். அவர்கள் அனைவரும் அடையாளம் தெரியாதவாறு முகமூடி அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. கொள்ளையடிக்கப்பட்ட தொகை எவ்வளவு? என்ற உடனடி விபரம் ஏதும் வெளியாகாத நிலையில் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை வங்கியில் இருந்ததாக தெரிகிறது. குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்கள் அதிகம் நடமாடும் பகுதியில் நடைபெற்ற இந்த துணிகர கொள்ளை சம்பவம் உள்ளூர்வாசிகளிடையே அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com