Vilupuram - Grandson murdered Grandparents
Vilupuram - Grandson murdered Grandparentspt desk

விழுப்புரம்: “அடுத்தது உன்னையும்...”- தாத்தா பாட்டியை கொலை செய்துவிட்டு தந்தையையும் மிரட்டிய இளைஞர்!

விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமத்தில் வயதான தம்பதியை அவர்களின் பேரனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

விழுப்புரம் அருகேயுள்ள பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலுவு ஆறுமுகம் - மணி கலுவு தம்பதியினர். மூதிய தம்பதியான இவர்கள் வசிக்கும் வீட்டிற்கு நேற்று மாலை இவர்களது பேரன் அருள் சக்தி மது போதையில் சென்றுள்ளார். அப்போது வீட்டிலிருந்த தன் தாத்தா பாட்டி இருவரையும் வற்புறுத்தி குளிர்பானம் குடிக்க வைத்துள்ளார் அவர்.

இதையடுத்து அங்கிருந்து அருள் சக்தி சென்ற பிறகு அருள் சக்தியின் தந்தை முருகன், தனது அப்பா அம்மா எப்படி இருக்கிறார்கள் என வீட்டின் அருகே வசிப்பவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பார்க்கச் சொல்லியுள்ளார். இதைத் தொடர்ந்து அருகில் வசிப்பவர்கள் முதியவர்கள் வசிக்கும் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது வயதான இருவரும் இறந்து கிடந்துள்ளனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் வழக்குப் பதிவு செய்து வயதான தம்பதி எப்படி கொலை செய்யப்பட்டனர் என விசாரணை மேற்கொண்டனர்.

அப்படி போலீசார் நடததிய விசாரணையில், அருள் சக்தி வயதான தம்பதியரை கொலை செய்துவிட்டு தந்தை முருகனிடம் சென்று, ‘உனது தாய் தந்தையை கொலை செய்துவிட்டேன்; உன்னையும் கொலை செய்துவிடுவேன்’ என மது போதையில் கூறியது தெரியவந்துள்ளது. இதை அருள் சக்தியின் தந்தை முருகன் போலீஸில் தெரிவித்திருக்கிறார். அதன் பேரில் போலீசார் விசாரனை செய்து வரும் நிலையில், அருள் சக்தி தனது மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளது, மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருள் சக்தி, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொலை செய்திருக்கலாமோ என்று கோணத்தில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com