\
தென்காசி: 45 நாட்களுக்கு முன் காணாமல் போன பாட்டியும் பேத்தியும் அழுகிய நிலையில் மீட்பு

தென்காசி: 45 நாட்களுக்கு முன் காணாமல் போன பாட்டியும் பேத்தியும் அழுகிய நிலையில் மீட்பு

தென்காசி: 45 நாட்களுக்கு முன் காணாமல் போன பாட்டியும் பேத்தியும் அழுகிய நிலையில் மீட்பு
Published on

தென்காசி மத்தளம்பாறை அருகே 45 நாட்களுக்கு முன் காணாமல் போன பாட்டியும் பேத்தியும் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி 12ம் தேதி தென்காசி காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது கீழப்புலியூரைச்சேர்ந்த கோமதியம்மாள்(55) என்பவரும் அவரது பேத்தி உத்ரா என்ற ஒன்றரை வயது குழந்தையும் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் புகார் கொடுத்திருந்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மத்தளம்பாறை அருகே காணாமல் போன பாட்டி மற்றும் பேத்தியின் உடல் அழுகிய நிலையில் சாக்குபையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட கோமதியம்மாள் முத்துமாலைபுரத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கடன் கொடுத்திருப்பதும் அவர் கடனை திருப்பி கேட்க சென்ற போது கைகலப்பில் அவரும் குழந்தையும் கொலைசெய்யப்பட்டிருக்கலாம் எனவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் 2 பேரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com