திருப்பத்தூர்: பெண்ணுக்கு பாலியல் தொல்லை... அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கைது
செய்தியாளர்: ஆர்.இம்மானுவேல் பிரசன்னகுமார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பெரிய மோட்டூர் ஊராட்சி பகுதியில் உள்ள பூனைக்குட்டி பள்ளம் நடுநிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவர் சுப்பிரமணி. இவர் ஒரு பெண்ணிடம் நேற்று மாலை ஆபாசமாக பேசி கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
அப்பெண் இதுகுறித்து அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து இன்று காலை அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஒன்றுகூடி உடனடியாக தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஜோலார்பேட்டை காவல் துறையினர் மற்றும் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அந்தப் பெண்ணிடம் புகாரை பெற்று தலைமையாசிரியரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்