\
மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி செய்த அரசு அதிகாரிகள்

மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி செய்த அரசு அதிகாரிகள்

மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி செய்த அரசு அதிகாரிகள்
Published on

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தில் சுமார் 18 லட்ச ரூபாயை மோசடி செய்ததாக திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குளத்தூர் ஊராட்சியில் கடந்த 2014-15 மற்றும் 2016- 19 ஆம் ஆண்டுகளில் வீடு கட்டாமலேயே முடிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் 17 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் தேதி வரை கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் பணிபுரிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட 15 பேர் வழக்கு பதியப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com