குற்றம்
தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சமா?: வெளியானது வீடியோ
தாலிக்கு தங்கம் வழங்க லஞ்சமா?: வெளியானது வீடியோ
தருமபுரியில், தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளிடம் லஞ்சம் பெற்றதாக சமூக நலத்துறை அலுவலர் மீது புகார் எழுந்துள்ளது.
தருமபுரியில் இன்று நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் தாலிக்கு தங்கம் பெற உள்ள பயனாளிகளிடம் இருந்து, நல்லம்பள்ளி சமூக நலத்துறை அலுவலர் மாதம்மாள் லஞ்சம் பெற்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ வாட்ஸ் அப்பில் வெளியாகியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் படித்த மற்றும் பட்டதாரி ஏழை பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு தங்கமாக 8 கிராம் மற்றும் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.