அரசு செவிலியர் தற்கொலை விவகாரம் - தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவர் மீது புகார்!

அரசு செவிலியர் தற்கொலை விவகாரம் - தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவர் மீது புகார்!
அரசு செவிலியர் தற்கொலை விவகாரம் - தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவர் மீது புகார்!

காரைக்காலில் அரசு செவிலியர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவத்தில், தற்கொலைக்கு தூண்டியதாக மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளரை கைது செய்ய செவிலியரின் கணவர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோட்டுச்சேரியைச் சேர்ந்த புனிதவள்ளி என்பவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் நேற்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது கணவர் ரமேஷ் அளித்த புகாரின் பேரில் கோட்டுச்சேரி காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புனிதவள்ளியின் சடலம் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இறந்த செவிலியர் புனிதவள்ளியின் கணவர் ரமேஷ் மற்றும் உறவினர்கள் புனிதவள்ளியின் உடலை வாங்க மறுத்து, புனிதவள்ளியை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரில், கோட்டுச்சேரி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் நிஷா மற்றும் அதே மருத்துவமனையில் மருத்துவ உதவியாளராக பணிபுரியும் அப்பு என்கிற ராஜேஷ் ஆகிய இருவரும் தனது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாகத் தெரிவித்துள்ளார். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புனிதவள்ளியின் சகோதரர் மகேஷ் குமார், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளோம். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு ஒரு வாரத்திற்குள்ளாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் உடலை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்ததாகக் கூறினார். வழக்கை நேர்மையான முறையில் விசாரித்து நீதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com