குற்றம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
துபாயில் இருந்து வந்த 3 பேரிடம் திருச்சி விமான நிலையத்தில் ரூ. 1.87 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து சிலர் தங்கம் கடத்தி வருவதாக திருச்சி சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து துபாயில் இருந்து விமானத்தில் வந்த சந்தேகத்திற்கிடமான 3 பேரை பிடித்து திருச்சி வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் ரூ.1.87 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.