
கோவை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரகசிய தகவலின் அடிப்படையில், ஷார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் வந்த பயணிகளை சோதனை செய்தனர். அதில், 4 பயணிகள் தங்கள் ஜீன்ஸ் பேண்ட், உள்ளாடைகளில் மறைத்து எடுத்து வந்த தங்கத்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.1.9 கோடி மதிப்பிலான 3.03 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இக்கடத்தலில் சம்பந்தப்பட்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜியாவுதீன் (27) மற்றும் சென்னையைச் சேர்ந்த ஷேக் முஹம்மது (31) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல் ரூ.50 லட்சத்திற்கும் குறைவான மதிப்பில் தங்கத்தை கடத்தி வந்த மேலும் இருவரிடம் இருந்து தங்கததை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களை பிணையில் விடுவித்தனர்.