மதுரை விமான நிலையத்தில் ஏழு லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் ஏழு லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மதுரை விமான நிலையத்தில் ஏழு லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
Published on

சிங்கப்பூரிலிருந்து மதுரைக்கு விமான மூலம் கடத்தி வரப்பட்ட தங்கத்தை மத்திய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மதுரை விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனைத்தொடர்ந்து சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் பாபு தலைமையில் சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலைய ஊழியர்களுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  

இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மீனாட்சி சுந்தரம்(45) என்பவர் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரது கை பையில் மறைத்து கடத்தி வரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதில் 200 கிராம் எடையுள்ள 4 தங்க வளையல்களை சோதனை மூலம் கண்டுபிடித்துள்ளாகவும் அதன் மதிப்பு ரூ. 6,69,400 என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். இதனைத்தொடர்ந்து கடத்தி வரப்பட்ட தங்கம் குறித்து மீனாட்சி சுந்தரத்திடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு உதவிய நபரை  டி.ஆர்.ஐ. அதிகாரிகள் கைது செய்ய முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com