\
சிலிண்டரைப் பயன்படுத்தி 45 சவரன் கொள்ளை

சிலிண்டரைப் பயன்படுத்தி 45 சவரன் கொள்ளை

சிலிண்டரைப் பயன்படுத்தி 45 சவரன் கொள்ளை
Published on

சென்னையில் ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் வீட்டில் 45 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அறைக்கதவை உடைக்க காலி சமையல் சிலிண்டரை பயன்படுத்தி திருடிச்சென்றுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் பூபதி, தனது மனைவியுடன் சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தந்தை வீட்டுக்கு மகன் சபரீஷ் வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பிரதான கதவு பாதியாக உடைக்கப்பட்டு கிடந்தது.

கொள்ளையர்கள் அதிகாலையில் பூபதி வீட்டிற்குள் வந்தபோது பூட்டை உடைக்க முடியாததால் அங்கு இருந்த காலி கியாஸ் சிலிண்டர் எடுத்து கதவை ஒருஆள் நுழையும் படி உடைத்து நுழைந்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொண்டு வந்த இரும்பு கம்பிகளை கொள்ளையர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதே பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர் என்று பாதிக்கப்பட்டவர் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com