CCTV காட்சி
CCTV காட்சிpt desk

தேனி | இறந்த மூதாட்டியின் உடலில் இருந்து தங்க செயின் திருட்டு.. CCTV காட்சியால் சிக்கிய பெண்!

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியில் உயிரிழந்த - மூதாட்டியின் உடலில் இருந்த 4 பவுன் தங்கச் செயினை திருடிச் சென்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Published on

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள எஸ் எஸ்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மனைவி கமலம். 82 வயதான மூதாட்டி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது வரும் வழியிலேயே மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து அவசர சிகிச்சை பிரிவு 802 வது அறையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூதாட்டி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

அந்த அறையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் உடலில் இருந்த 4 பவுன் தங்க செயின் திருடு போனது செயின் காணாமல் போனதையறிந்து அதிர்ச்சி அடைந்த கமலம் என்பவரின் மருமகன் ரவிச்சந்திரன் கானாவிளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிகிச்சை அறையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர் மூதாட்டியின் உடலில் இருந்து தங்கச் செயினை திருடிச் சென்றது தெரியவந்தது.

CCTV காட்சி
கள்ளக்குறிச்சி | இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்து - பெண் உட்பட இருவர் உயிரிழப்பு

இதையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த பெண் யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், உறவினரின் சிகிச்சைக்காக வந்த தேனி வளையப்பட்டி பகுதியில் சேர்ந்த நந்தினி என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து தலைமறைவாகி இருந்த நந்தினி என்ற அந்த பெண்ணை கானாவிளக்கு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com