\
ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்

ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்

ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க கட்டிகள் பறிமுதல்
Published on

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 1 கோடி‌ ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 

நேற்றிரவு 10 மணியளவில் விமானத்தில் வந்த இப்ராஹிம் எ‌ன்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1 கோடியே 40 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இப்ராஹிமிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். யாருக்காக அவர் நகைகளை கடத்தி வந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் சுங்கத்துறையினர் இவ்விவகாரம் குறித்து இதுவரை வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com