கோவை: காதலன் மீது ஆசிட் ஊற்றி கத்தியால் குத்திவிட்டு காதலியும் தற்கொலைக்கு முயற்சி

கோவை: காதலன் மீது ஆசிட் ஊற்றி கத்தியால் குத்திவிட்டு காதலியும் தற்கொலைக்கு முயற்சி

கோவை: காதலன் மீது ஆசிட் ஊற்றி கத்தியால் குத்திவிட்டு காதலியும் தற்கொலைக்கு முயற்சி
Published on

கோவையில் காதலர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காதலன் மீது காதலி ஆசிட் ஊற்றியும், கத்தியால் குத்தியும் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து காதலியும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனால், தற்போது இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி ஆகிய இருவரும் கோவையில் அப்பார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகின்றனர். லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. அப்பிரச்சனயில் காதலன் ராகேஷ் மீது, ஹேண்ட் பேக்கில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசியுள்ளார் காதலி ஜெயந்தி. மேலும் ராகேஷை கத்தியால் குத்திவிட்டு தானும் தூக்க மாத்திரை சாப்பிட்டு ஜெயந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

விஷயம் அறிந்து காவலர்கள் அங்கு சென்று விசாரித்து வருகின்றனர். தற்போது இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசார் ராகேஷ் மற்றும் ஜெயந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com