பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி - 'வாட்ஸ்அப்' மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி - 'வாட்ஸ்அப்' மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி - 'வாட்ஸ்அப்' மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்
Published on

திருச்சி அருகே சிறுமியை ஐந்து இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை, அவரது உறவினரான ரெங்கநாதன் (21) என்பவர் தனது பைக்கில் காவிரி கரையோரம் உள்ள தைலமர காட்டுக்குள் அழைத்துச் சென்று அச்சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரெங்கநாதன், மணி (எ) மணிகண்டன், தர்மா (எ) கணேஷ் உட்பட நான்கு நண்பர்களை வரவழைத்து. 5 பேரும் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதோடு அதனை செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து வீடியோவை வெளியிட்டு விடுவேன் என தொடர்ந்து மிரட்டியாத கூறப்படுகிறது. 

இந்நிலையில் சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிவதை கண்ட அவரது பெற்றோர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்கு சிறுமிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். குழந்தை திருமணம் குறித்து தகவல் அறிந்த சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிறுமியை மீட்டு திருச்சியில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். தற்போது வரை சிறுமி காப்பகத்திலேயே இருந்து படித்து வருகிறார்.

இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஐந்து பேரில் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவியது. அதனைக் கண்ட சிறுமியின் பெற்றோர் அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து காப்பகத்தில் இருந்த சிறுமியை, சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்து நடந்த விபரங்களை கேட்டறிந்தனர். இதையடுத்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து ரெங்கநாதன் மற்றும் சிறுகாம்பூரை சேர்ந்த மணி (எ) மணிகண்டன், தர்மா (எ) கணேஷ் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 5 பேர் மீதும் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள இருவரை தேடிவரும் நிலையில், சிறுமியை திருமணம் செய்த இளைஞர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த வருடம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரை போலீசார் தேடி வருவது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com