\
மாணவியை கிண்டல் செய்தவரை தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

மாணவியை கிண்டல் செய்தவரை தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

மாணவியை கிண்டல் செய்தவரை தட்டிக்கேட்டவருக்கு அரிவாள் வெட்டு
Published on

திருவாரூரில் பள்ளி மாணவியை கேலி செய்ததை தட்டி கேட்டவர்களை அரிவாளால் வெட்டிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர் பவித்திரமாணிக்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் சதன்ராஜ். இதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்த விஜய் என்பவர் அடிக்கடி கிண்டல் செய்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த சதன்ராஜ் ஃபோன் செய்து தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இந்த விரோதம் காரமணாக அம்மா தோப்பு பகுதியில் சதன்ராஜ், அவருடை நண்பர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருடன் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விஜய் மற்றும் திருவாரூர் நெய்விளக்கு தோப்பு தெருவை சேர்ந்த முத்து ஆகிய இருவரும் தகராறு செய்து அரிவாள், கத்தியால் தாக்கியுள்ளனர். இதில் சதன்ராஜ்க்கு தலையில் அரிவாளால் வெட்டும், கார்த்திகேயனுக்கு வயிற்றில் கத்தி குத்தும் விழுந்துள்ளது. அப்போது விஜயின் தந்தை வாசுதேவன் உடனிருந்தார்.

காயம் அடைந்த இருவரையும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருவாரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய், அருடைய தந்தை வாசுதேவன், முத்து ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com