குற்றம்
புதுக்கோட்டை: சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்தவருக்கு சாகும்வரை ஆயுள்-4 மாதங்களில் தீர்ப்பு
புதுக்கோட்டை: சிறுமியை பாலியல்வன்கொடுமை செய்தவருக்கு சாகும்வரை ஆயுள்-4 மாதங்களில் தீர்ப்பு
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் கடந்த ஜூன் மாதம் 12 வயது சிறுமியை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்த திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியைச் சேர்ந்த மாதவன் (29) என்ற குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்ற நீதிபதி சத்தியா தீர்ப்பு வழங்கியுள்ளார்.
குற்றச் சம்பவம் நடைபெற்று 4 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.