சென்னை கொரட்டூரில் இளம்பெண் பலத்த ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னை கொரட்டூர் அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் பூர்ணிமா. பட்டதாரி. இவருக்கு செப்டம்பர் மாதம் திருமண செய்ய நிச்சயம் முடிந்துள்ளது. திருமண வேலையாக திருநாவுக்கரசு மற்றும் அவரது மனைவி தெய்வசிகாமணி ஆகியோர் திருவள்ளூர் சென்றுள்ளனர். இதனை அடுத்து மாலை வீட்டிற்கு திரும்பினர். பூர்ணிமாவின் பாட்டி உள்ளே சென்று பார்த்த போது பூர்ணிமா ரத்த காயங்களுடன் மின் விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். வீடு முழுவதும் ரத்தம் பரவியிருந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி கூச்சல் போட்டார். அக்கம்பக்கத்தினர் காவல்துறையில் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கொரட்டூர் காவல்துறையினர் பூர்ணிமாவின் சடலத்தை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் பூர்ணிமா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதும் அதே போன்று வீட்டை சுற்றி ரத்த கறைகள் உள்ளதும் காவல்துறையினர் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே உயிர் இழந்த பூர்ணிமா வீட்டில் இருந்து மூன்று பக்க கடிதத்தை காவல்துறையினர் கைப்பற்றி உள்ளனர்.