இளம் பெண்ணை அழைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை: அப்பாவின் நண்பர் உட்பட 3 கைது!
இளம் பெண்ணை அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அப்பாவின் நண்பரை தேடி வருகின்றனர்.
மும்பையிலுள்ள ட்ராம்பே பகுதியை சேர்ந்தவர் உஷா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது வீட்டுக்கு புதன்கிழமையன்று அப்பாவின் நண்பர் வந்தார். தெரிந்தவர் என்பவர் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார் உஷா. ‘வாயேன் அப்படியே ஜாலியா வெளிய போயிட்டு வரலாம்’ என்று அழைத்தார் அப்பாவின் நண்பர். தெரிந்தவர்தானே என்று அம்மாவும் உஷாவை அனுப்பி வைத்தார். கஞ்சூர்மார்க் பகுதிக்குச் சென்ற அவர், ஒரு அறைக்கு உஷாவை அழைத்துச் சென்றார். அங்கிருந்து ஒருவருக்கு போன் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் 19 வயதுடைய 3 பேர் வந்தனர். ’நமக்கு வேண்டியவங்கதான்’ என்று அறிமுகம் செய்து வைத்தார் அப்பாவின் நண்பர். பிறகு அதில் ஒருவன் அவனுக்கு தெரிந்த இடத்துக்கு அழைத்துச் சென்றான் உஷாவை. பிறகு அங்கு நான்கு பேரும் மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதோடு உஷாவை விடவில்லை.
இதற்கிடையே புதன்கிழமை மாலை வரை உஷாவை காணாததால் அவரின் அம்மா, அந்த நண்பருக்கு போன் செய்தார். போன் நாட் ரீச்சபிளில் இருந்தது. இதையடுத்து ட்ராம்பே போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து வந்தனர்.
இதற்கிடையே வியாழக்கிழமை அன்று காலையில் மங்கூர்ட் பகுதியில் அந்தக் கும்பம் உஷாவை விட்டுவிட்டுச் சென்றுவிட்டது. அங்கிருந்து நடந்தே வீட்டுக்கு வந்தார் உஷா. அவரைக் கண்டதும் பதறித் துடித்துவிட்டார் அம்மா. ஏனென்றால் அவ்வளவு அலங்கோலமாக நின்றிருந்தாள். இதையடுத்து சயான் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். போலீசில் அளித்த வாக்குமூலத்தில் பகீர் தகவல்களை கூறியுள்ளார் உஷா.
’தன்னை 11 வயதில் தாத்தா பாலியல் வன்கொடுமை செய்தார், பிறகு உறவினர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். இப்போது இந்தச் சம்பவம்’ என கண்ணீர் விட்டுள்ளார். இதையடுத்து மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அப்பாவின் நண்பரை தேடி வருகின்றனர்.