\
ஜெயலலிதா வழிபட்ட கோயிலில் கஞ்சா செடி! ஒருவர் கைது..

ஜெயலலிதா வழிபட்ட கோயிலில் கஞ்சா செடி! ஒருவர் கைது..

ஜெயலலிதா வழிபட்ட கோயிலில் கஞ்சா செடி! ஒருவர் கைது..
Published on

காஞ்சிபுரத்தில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது செய்யப்பட்டார். 

காஞ்சிபுரத்தில் உள்ள பிரபல கோயில்களில் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலும் ஒன்று. இந்தக் கோயில் வளாகத்தில் மூர்த்தி என்பவர் சட்ட விரோதமாக கஞ்சா செடியினை வளர்த்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து கோயில் வளாகத்தில் சோதனை செய்த போலீஸார், அங்கு இருக்கும் செடியை கஞ்சா செடிதான் என்று உறுதி செய்தனர். 

பின்னர் மூர்த்தி என்பவர் தான் காஞ்சா விதைகளை கோயிலில் வளாகத்தில் தூவி கஞ்சா செடியினை வளர்த்ததையும் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து உடனடியாக செடியை பறிமுதல் செய்த போலீஸார், மூர்த்தியையும் கைது செய்தனர். முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து வழிப்பட்டு வந்த கோயில்களில், இந்த வழக்கறுத்தீஸ்வரர் கோயிலும் முக்கியமான ஒன்றாகும். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com