குற்றம்
மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீனில் வெளிவந்து 40 பேருக்கு விருந்து வைத்த டெல்லி தாதா
மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீனில் வெளிவந்து 40 பேருக்கு விருந்து வைத்த டெல்லி தாதா
டெல்லியை சேர்ந்த பிரபல ரவுடி சன்னி, மருத்துவ சிகிச்சை என்ற காரணத்துக்காக சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்து, 40 பேருக்கு விருந்து வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மருத்துவ சிகிச்சைக்காக இடைக்கால ஜாமீனில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட டெல்லி தாதா சன்னி என்கிற நந்தி, துவாரகாவில் 40 பேருக்கு விருந்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்று போலீசாருக்கு தகவல் வந்தது. காவல்துறைக்கு தகவல் கிடைத்த பின்னர் நடத்திய சோதனையில் விருந்து நடந்த இடத்திலிருந்து 37 பேர் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், சன்னி மற்றும் சிலர் அந்த இடத்திலிருந்து தப்பித்து சென்றுவிட்டனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து ஐந்து சட்டவிரோத துப்பாக்கிகளையும் போலீசார் மீட்டனர்.