லிங்க்கை தொட்டதும் அபேசான ரூ.65,000 - பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் நூதன மோசடி!

லிங்க்கை தொட்டதும் அபேசான ரூ.65,000 - பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் நூதன மோசடி!
லிங்க்கை தொட்டதும் அபேசான ரூ.65,000 - பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் நூதன மோசடி!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பர்னிச்சர் கடை உரிமையாளரிடம் ராணுவ வீரர் எனக்கூறி 'கூகுள் பே' மூலம் 65 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபர் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவில்பட்டியில் கார்த்திகேயன் என்பவர் பர்னிச்சர் கடை நடத்திவருகிறார். சில நாட்களுக்கு முன் கார்த்திகேயனை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனது பெயர் சாகில்குமார் என்றும், தாம் ஒரு ராணுவ வீரர் என்றும் காஷ்மீரில் இருந்து பேசுவதாகவும் கூறியுள்ளார். சாத்தூரில் உள்ள தனது நண்பருக்கு பரிசளிக்க தனக்கு பர்னிச்சர்கள் வேண்டும் என்று சாகில்குமார் கேட்டிருக்கிறார். அதற்குரிய மாதிரி படங்களையும் வாட்ஸ் அப்பில் அனுப்பியிருக்கிறார். 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அந்த பொருட்களை பேரம் பேசி 65 ஆயிரம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் பணம் அனுப்புவதாக கூறிய சாகில்குமாருக்கு தனது மகனின் வங்கிக்கணக்கு, அதற்குரிய கூகுள்பே எண்ணை அனுப்பியிருக்கிறார் கார்த்திகேயன், முதலில் ஒரு ரூபாய் அனுப்பிய சாகில், அது வந்து சேர்ந்ததை உறுதிசெய்துகொண்டு செல்போனில் ஒரு லிங்கை அனுப்பியிருக்கிறார். அந்த லிங்கை தொட்டதுமே, அருண்குமாரின் வங்கிக்கணக்கில் இருந்து 65 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதற்கான தகவல் வந்தது.

சாகில்குமாரை தொடர்பு கொண்டு கேட்டபோது இருவேறு லிங்க்குகளை அனுப்பியுள்ளார். இதனால் உஷாரான கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அறிமுகமில்லாத நபர் அனுப்பும் லிங்க்குகளை தொடவேண்டாம் என்பது சைபர் குற்ற காவல்துறையினரின் எச்சரிக்கையாக இருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com