\
`கூடவே வந்துட்டு...’- நண்பனிடமே செயின் பறிப்பில் ஈடுபட்ட சக நண்பர்கள்! பகீர் பின்னணி

`கூடவே வந்துட்டு...’- நண்பனிடமே செயின் பறிப்பில் ஈடுபட்ட சக நண்பர்கள்! பகீர் பின்னணி

`கூடவே வந்துட்டு...’- நண்பனிடமே செயின் பறிப்பில் ஈடுபட்ட சக நண்பர்கள்! பகீர் பின்னணி
Published on

மதுரை வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற சட்டக் கல்லூரி மாணவரை தாக்கி தங்க செயினை பறித்த சம்பவத்தில் சக நண்பனே சதித் திட்டம் தீட்டியது அம்பலமானது.

மதுரை கான்பாளையம் பகுதியை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவரான பாலாஜி என்பவர் தனது நண்பரான இஸ்மாயில் என்பவருடன் ஒன்றாக வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாலிபர்கள் 5 பேர் பாலாஜியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 8 சவரன் தங்க செயினை பறித்து சென்றனர். இச்சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல்நிலையத்தில் பாலாஜி  புகார் அளித்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த நண்பரான இஸ்மாயில் என்பவர் தனது நண்பர்களான சுந்தர வர்மா, ஆதிஸ்வரன், தினேஷ், மவுந்தள் உட்பட 5 பேரை அனுப்பி பாலாஜி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்க செயினை வழிப்பறி செய்து நாடகமாடியது தெரியவந்தது.

5 பேரையும் கைது செய்த வாடிப்பட்டி போலீசார் அவர்களிடமிருந்த 8 சவரன் தங்க நகையை மீட்டு பாலாஜியிடம் ஒப்படைத்தனர். நண்பரிடமே ஆட்களை அனுப்பி கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்ட நண்பனின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com