அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி 2.73 கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது

அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி 2.73 கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது
அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி 2.73 கோடி ரூபாய் மோசடி செய்தவர் கைது

விருதுநகர் மாவட்டத்தில் 41 இளைஞர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகவும், அரசு ஒப்பந்தப் பணிகள் எடுத்துத் தருவதாகவும் கூறி 2.73 கோடி ரூபாய் மோசடி செய்ததாக திருமங்கலத்தைச் சேர்ந்தவரை போலீஸார் இன்று கைதுசெய்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள என். மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் (41). அரசு ஒப்பந்ததாரர். இவரிடம் சாத்தூர் டிஎஸ்பி ஜீப் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் காவலர் ராஜபாண்டி திருமங்கலத்தில் உள்ள தனது சித்தப்பா மகன் சரவணகுமார் (45) என்பவர் சென்னையில் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றி வருவதாகக் கூறி அறிமுப்படுத்தி உள்ளார்.

சரவணக்குமார் தனக்கு அனைத்து அதிகாரிகளையும் தெரியும் என்றும், எந்த அரசு வேலையாக இருந்தாலும் வாங்கிக் கொடுப்பதாகவும், அரசு ஒப்பந்தப் பணிகள் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார். 

இதை நம்பி கண்ணன், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 41 பேர் அரசு வேலைக்காகவும், அரசு ஒப்பந்தத்திற்காகவும் 2.73 கோடி ரூபாய் பணத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. வங்கி மூலமாகவும், நேரடியாகவும் பணத்தைப் பெற்ற சரவணக்குமார் பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார்.

இதுகுறித்து, விருதுநகரில் உள்ள மாவட்டக் குற்றப் பிரிவில் கண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் அண்மையில் புகார்  அளித்தனர். இந்த புகாரின் பேரில்  வழக்குப் பதிவு செய்த போலீசார் சரவணக்குமாரை இன்று கைதுசெய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com