பல பெண்களிடம் ரூ.14 லட்சம் ரூபாய் மோசடி.. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெண் நிர்வாகி கைது!

சேலத்தில் பல பெண்களிடம் 14 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கட்சி நிர்வாகியை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
 காயத்ரி - ஏமாற்றிய பெண்
காயத்ரி - ஏமாற்றிய பெண்புதிய தலைமுறை

சேலத்தில் பல பெண்களிடம் 14 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கட்சி நிர்வாகியை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

ஓமலூர் அருகே தொளசம்பட்டியை சேர்ந்த மஞ்சுளா என்பவர் புகார் ஒன்றினை அளித்துள்ளார். அந்த புகாரின்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் சேலம் மாநகர் மாவட்ட துணைச் செயலாளராக உள்ள காயத்ரி என்பவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள சமூக நலத்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி வருவதாக மஞ்சுளாவுக்கு அறிமுகமாகியுள்ளார்.

 காயத்ரி - ஏமாற்றிய பெண்
காயத்ரி - ஏமாற்றிய பெண்புதிய தலைமுறை

இதன் பின்னர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் தமிழக அரசு ஒவ்வொருவருக்கும் ஐந்து லட்ச ரூபாய் வரை கடனுதவி வழங்குவதாக கூறி இருக்கிறார்.

இதன் மூலம் 20ஆயிரம் ரூபாய் முன் பணமாக பெற்றிருக்கிறார் காயத்ரி. இதை நம்பி மஞ்சுளா உட்பட பல பெண்கள் 24 லட்ச ரூபாயை கொடுத்துள்ளனர். விசாரித்ததில் காயத்ரி கூறியது போன்ற நலத்திட்டம் ஏதும் அரசிடம் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காயத்ரியிடம் பணத்தைத் திரும்பிக் கேட்டபோது 10 லட்ச ரூபாய் மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளார்.

 காயத்ரி - ஏமாற்றிய பெண்
தர்மபுரி: ஸ்கெட்ச் போட்டு கொள்ளையர்களிடம் இருந்து 5.9 கிலோ தங்கத்தை மீட்ட போலீசார் – நடந்தது என்ன?

ஆனால் மீதமுள்ள 14 லட்ச ரூபாயை திருப்பி கொடுக்காமல் , கொலை மிரட்டல் விடுத்ததால் காவல் துறையிடம் மஞ்சுளா புகார் அளித்துள்ளார். இதையடுத்து காயத்ரி உட்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதில் ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாகி இருந்த காயத்ரியை தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த அவரை தற்போது கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com