கார் மீது உரசி சென்ற லாரி - இழப்பீடு பணத்திற்காக லாரி டிரைவர் கடத்தல்

கார் மீது உரசி சென்ற லாரி - இழப்பீடு பணத்திற்காக லாரி டிரைவர் கடத்தல்

கார் மீது உரசி சென்ற லாரி - இழப்பீடு பணத்திற்காக லாரி டிரைவர் கடத்தல்

பூந்தமல்லி அருகே கார் மீது லாரி உரசல். இழப்பீடு பணத்திற்காக லாரி டிரைவரை கடத்தி சென்றதாக மதபோதகர் உட்பட 4 பேர் கைது.

வியாசர்பாடியை சேர்ந்தவர் மோகன்தாஸ் (53). இவர் வியாசர்பாடியில் கிறிஸ்தவ சபை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலை நசரத்பேட்டை அருகே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருகே வந்த லாரி காரின் மீது உரசியதில் காரில் லேசான சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து லாரி டிரைவர் மணிகண்டன் என்பவர் தனது உரிமையாளரிடம் பேசிவிட்டு இழப்பீடாக ரூ. 3 ஆயிரம் கொடுத்ததாகவும் அதனை அவர்கள் வாங்காமல் மாதவரத்தில் உள்ள கார் பழுது பார்க்கும் இடத்திற்கு வந்து செலவாகும் தொகையை தருமாறு கூறி மணிகண்டனை வியாசர்பாடிக்கு அழைத்துச்சென்று ரூ. 30 ஆயிரம் கொடுத்தால்தான் மணிகண்டனை விடுவிக்க முடியும் என மோகன்தாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மணிகண்டனின் உரிமையாளர் தனது டிரைவரை கடத்திச் சென்று விட்டதாக மாதவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மணிகண்டனை மீட்டனர். மேலும் மதபோதகர் மோகன்தாஸ் அவரது டிரைவர் மற்றும் நண்பர்களான ஐசக், ஜீவா, அன்பு ஆகிய நான்கு பேரை கைது செய்து நசரத்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து நசரத்பேட்டை போலீசார், ஆட்கடத்தல் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு போலீசார் கொண்டு சென்றபோது அங்கு கூடியிருந்த 50-க்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதையடுத்து அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com