கள்ளக்குறிச்சி கலவரம்: தொடரும் கைது படலம் - மேலும் 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி கலவரம்: தொடரும் கைது படலம் - மேலும் 4 பேர் கைது
கள்ளக்குறிச்சி கலவரம்: தொடரும் கைது படலம் - மேலும் 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி பள்ளியில் ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கலவரம் தொடர்பாக வீடியோ, புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்டு அடுத்தடுத்து கைது நடவடிக்கை தொடர்கிறது.

அந்த வகையில், கனியாமூர் பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்டதாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ், நவீன் குமார், கோம துரை, முருகன் ஆகியோர் கைதாகி உள்ளனர். இதோடு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 330ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: வைகை ஆற்றில் அடுத்தடுத்து கரை ஒதுங்கும் சடலங்கள் - தொடர்கதையாகும் உயிரிழப்புகள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com