\
ஓடும் காரில் வைத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

ஓடும் காரில் வைத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்

ஓடும் காரில் வைத்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்
Published on

19 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொச்சியில் நேற்று இரவு 19 வயதான மாடலிங் செய்யும் பெண் ஒருவர் DJ பார்ட்டிக்குச் சென்றுவிட்டு அங்குள்ள பாரில் மது அருந்தியுள்ளார். சுயநினைவற்றிருந்த அந்த பெண்ணை 3 ஆண்கள் காரில் வைத்தே கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி பின்னர், காக்கநாட்டிலுள்ள அவரது தங்குமிடத்தில் விட்டுச் சென்றுள்ளனர்.

அந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்த அவருடைய தோழி இதுகுறித்து இன்ஃபோபார்க் காவல்நிலையத்தில் புகாரளித்தார். பின்பு அந்த புகாரானது எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணை கைது செய்தனர். அவரும் மாடலிங் துறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெண் தவிர திரிச்சூரைச் சேர்ந்த 3 இளைஞர்களை கைதுசெய்தனர். பாதிக்கப்பட்ட 19 வயது பெண் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். கைது செய்யப்பட்ட நால்வரிடமும் எர்ணாகுளம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com