சென்னை: பெண் தர மறுத்ததால் ஆத்திரம் - செவிலியரை காரில் கடத்தியதாக 4 பேர் கைது

வேளச்சேரியில் ஒருதலை காதல் விவகாரத்தில் செவிலியரை காரில் கடத்திச் சென்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: சாந்தகுமார்

சென்னை வேளச்சேரியில் செவிலியர் ஒருவர் பணி நிமித்தமாக மருத்துவமனைக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, காரில் வந்த சில மர்ம நபர்கள் அவரை கடத்திச் சென்றதாக, அதே மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு செவிலியர் மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் மருத்துவமனை நிர்வாகம் வேளச்சேரி காவல்துறையினருக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.

Nurse
Nursept desk

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து காரின் பதிவெண்ணை கொண்டு, காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் சுங்கச் சாவடிகளில் கண்காணிக்க உத்தரவிட்டனர்.

அதன் பேரில் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர். அப்போது அந்த கார் அச்சரபாக்கம் அருகே சுங்கச் சாவடியில் வந்தபோது அங்கிருந்த அச்சரபாக்கம் காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Accused
சென்னையில் அதிர்ச்சி! போதை ஊசி எடுத்துக்கொண்ட 17 வயது சிறுவன் மயங்கிவிழுந்து பலி!

இதையடுத்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சபாபதி (27) என்பவர் கடத்தப்பட்ட பெண்ணின் உறவினர் என்பதும், ஒருதலை பட்சமாக காதலித்து வந்தததும், பெண் கேட்டும் தராத ஆத்திரத்தில் நண்பர்கள் ஹரிஹரன், அஜய், ராஜேஷ் ஆகியோரோடு சேர்ந்து திருமணம் செய்ய காரில் கடத்தியதும் தெரியவந்தது. செவிலியரை கடத்திய சம்பவம் வேளச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com