\
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல்! வட மாநிலத்தவர்கள் 40 பேர் கைது

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல்! வட மாநிலத்தவர்கள் 40 பேர் கைது

பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீது தாக்குதல்! வட மாநிலத்தவர்கள் 40 பேர் கைது
Published on: 

ஈரோடு அருகே ஆயில் மில்லில் ஏற்பட்ட கலவரத்தில் போலீசாரை தாங்கியதாக 40 வடமாநில தொழிலாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே நஞ்சை ஊத்துக்குளியில் உள்ள பிரபல தனியார் ஆயில் ஆலையில் வடமாநில தொழிலாளி விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனையடுத்து இழப்பீடு வழங்கிய பின்பே உடலை எடுத்துச் செல்வோம் என போராடிய வடமாநிலத்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கியுள்ளனர்.

இதில் மொடக்குறிச்சி ஆய்வாளர் தீபா உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு கலவரத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களை தேடிவருகின்றனர். இதுகுறித்து ஏடிஎஸ்பி பாலாஜியிடம் கேட்டபோது, கலவரத்தில் ஈடுபட்டதாக தற்போது 40 நபர்கள் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com