சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் பறிமுதல்
Published on

சென்னை விமான நிலையத்தில் ஒரு கோடியே 34 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்தியாவில் இருந்து துபாய்க்கு முறைகேடாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தீவிர சோதனை நடத்திய அதிகாரிகள், சையது துராபுதீன் என்பவர் சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்ததால் அவரை சுற்றி வளைத்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில், சவுதி அரேபியாவின் ரியால், குவைத்தின் தினார், ஐக்கிய அரபு அமீரகத்தின் திர்ஹம் ஆகிய ரூபாய் நோட்டுககள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை கைப்பற்றி கணக்கீடு செய்ததில், இந்திய ரூபாய் மதிப்புபடி ஒரு கோடியே 34 லட்ச ரூபாயை கடத்த இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சையது துராபுதீன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com