\
புதுக்கோட்டையில் கேரள லாட்டரி விற்பனை - அதிமுக நிர்வாகி உட்பட 5 பேர் கைது

புதுக்கோட்டையில் கேரள லாட்டரி விற்பனை - அதிமுக நிர்வாகி உட்பட 5 பேர் கைது

புதுக்கோட்டையில் கேரள லாட்டரி விற்பனை - அதிமுக நிர்வாகி உட்பட 5 பேர் கைது
Published on
புதுக்கோட்டையில் சட்டவிரோதமாக, கேரள லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை பகுதியில், கேரளாவின் 3 நம்பர் லாட்டரி தடையை மீறி விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனையில் ஈடுட்டனர். பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த நபர்களை விசாரித்ததில், அவர்கள் வாட்ஸ்அப் குழு அமைத்து, ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக, மச்சுவாடி அருகே உள்ள பாலன்நகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, திருமயம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com